புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் டாஸ்மாக் கடை அருகே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் டாஸ்மாக் கடை அருகே முருகேசன் என்பவர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர்.
குற்றவாளியை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பனுக்கும் முருகேசனுக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் முருகேசனை ஐயப்பன் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து ஐயப்பனை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழையூர் பகுதியில் முருகேசன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பொதுமக்களும் மற்றும் வணிகர்களும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.