இலங்கை சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
தாய்லாந்தில் நடைபெற்ற பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் 6ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தனது பயணத்தை முடித்துக்கொண்டு இலங்கை சென்றடைந்தார். அவரை இலங்கையின் 6 மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று வரவேற்றனர்.
இதேபோல பாரம்பரிய நடன கலைஞர்களும், இந்திய வம்சாவளியினரும் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பிரதமர் மோடிக்கு, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில் சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அங்கிருந்த அமைச்சர்களை இலங்கை அதிபர் மோடிக்கு அறிமுகம் செய்து வைத்தார்.