திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அரசு பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னிலக்க பரிவர்த்தனை பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அரசு பேருந்துகளில் மின்னிலக்க பரிவர்த்தனை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் பழனியிலிருந்து திருப்பூருக்குச் சென்ற அரசு பேருந்துகளில் மின்னிலக்க பரிவர்த்தனை மூலம் பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கப்பட்டது.
இதனால் சில்லறை தட்டுப்பாடு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால் நடத்துநர்களும், பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர். மின்னிலக்க பரிவர்த்தனை மூலம் எளிதாகவும் விரைவாகவும் பயணிகளுக்குப் பயணச்சீட்டு வழங்க முடிவதாகவும், பணிச்சுமையும் குறைந்துள்ளதாகவும் நடத்துநர்கள் தெரிவித்துள்ளனர்.