தேனி மாவட்டம், வருச நாடு பகுதியில் உள்ள மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மேகமலை அடர் வனப்பகுதியிலிருந்து உற்பத்தியாகும் மூல வைகை ஆற்றில் கடந்த சில நாட்களாகத் தண்ணீர் இன்றி காணப்பட்டது. இந்நிலையில் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளான வருச நாடு வனப்பகுதி, ஓயம்பாறை, வாலிபாறை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக வருச நாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து கடமலைக்குண்டு பகுதியைத் தண்ணீர் சென்றடைந்தது. இதனால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் எனவும், விவசாயம் மற்றும் குடிநீருக்கு அதிக அளவில் நீர் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.