நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி செயல்பட்ட பாரில் நபர் ஒருவர்க் கைக்குழந்தையுடன் சென்று மது அருந்திய காணொளி வெளியாகியுள்ளது.
ஆத்துமேடு பகுதியில் டாஸ்மாக் கடை அருகே 24 மணிநேரமும் பார் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பாரில் மது அருந்த வந்த நபர் ஒருவர் தனது குழந்தையைக் கையில் வைத்தபடியே மது அருந்தினார். இது தொடர்பான காணொளி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.