புனிதமான ராம நவமி நாளை தமிழ்நாட்டில் உள்ள தனது சகோதர, சகோதரிகளுடன் கழிக்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்து வைக்கிறார். தொடர்ந்து பல்வேறு நலத்திட்டப் பணிகளையும் அவர் துவங்கி வைக்கவுள்ளார்.
இந்நிலையில், தனது தமிழக வருகை தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, புனிதமான ராம நவமி நாளை தமிழ்நாட்டில் உள்ள தனது சகோதர, சகோதரிகளுடன் கழிக்க ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளைத் துவக்கி வைத்து அடிக்கல் நாட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.