RSS-ன் அங்கமாக விளங்கும் ப்ரஜ்னா பிரவாஹ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் “சென்னை இலக்கிய விழா 2025” நிகழ்ச்சி, சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தியக் கலாச்சாரம் மற்றும் அறிவு சார்ந்த விஷயங்களை நவீன காலத்தில் செயல்படுத்துவதன் முக்கிய நோக்கமாக “சென்னை இலக்கிய விழா 2025” நிகழ்ச்சி நடைபெறுகிறது.
RSS-ன் அங்கமாக விளங்கும் ப்ரஜ்னா பிரவாஹ் அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், தமிழ் ஜனம் தொலைக்காட்சி மீடியா பார்ட்னராக இணைந்துள்ளது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியை லெப்டினன்ட் ஜெனரல் கரண்பிர் சிங் பிரார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில், ஸ்வாமி நரசிம்மானந்தா, இங்கிலாந்து துறவி சாத்வி திவ்யா பிரபா, பேராசிரியர் ஸ்ரீனிவாச வேர்கெடி, எழுத்தாளர்கள் பிரபாகர், செண்பக பெருமாள், பாரதியாரின் பேத்தி உமா பாரதி ஆகியோர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினர்.
இதையடுத்து நிகழ்ச்சியில் Delimitation and States Reorganization எனும் புத்தகத்தை அதன் எழுத்தாளர் கௌதம் தேசிராஜு வெளியிட்டார்.