செங்கல்பட்டு அருகே தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு நடைபெற்றது. ஐஜேகே நிறுவன தலைவர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மாணவர் மத்தியில் உரையாற்றிவர், ஒரே நாடு, ஒரே தேர்தல் (ONOE) பல்வேறு தேர்தல்களை நெறிப்படுத்தவே செய்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம், மத்திய அரசு தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கலைக்க நினைக்கிறது என்ற ஒரு போலி பிம்பத்தை உருவாக்கி, தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என்று தெரிவித்தார்.