நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி, பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததில் பலத்த காயம் அடைந்தார்.
கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் வேலைக்கு ரயிலில் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில், அவர் ஓடும் ரயிலில் ஏறுவதற்காக முயன்றபோது நடைமேடையில் தவறி விழுந்தார். அப்போது சட்டை பையில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதில், அவர் பலத்த காயம் அடைந்தார்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் விக்னேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.