கோவை மாவட்டம் காரமடையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் நேந்திரன், கதலி உள்ளிட்ட வாழைகளை பயிர் செய்திருந்தனர்.
இந்த நிலையில், நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. குறிப்பாக வெள்ளியங்காடு, கண்டியூர், சாலை வேம்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.
குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், ஒரு ஏக்கருக்கு 8 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதால், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.