சேலம் அருகே டாஸ்மாக் பாரில் காவல் உதவி ஆய்வாளரைத் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் ஐந்து ரோடு அமராவதி தெருவில் செயல்படும் டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள பாரில் மதுபோதையில் சில இளைஞர்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்துத் தகவலறிந்து சென்ற காவல்துறை அதிகாரிகள், தகராறில் ஈடுபட்ட இளைஞர்களைச் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது உதவி ஆய்வாளர் சேகரை ஒரு கும்பல் சரமாரியாகத் தாக்கியது.
இதில் காயமடைந்த சேகரை, சக காவலர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட பிரமோத்ராஜ், நரேன், சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.