கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறோம் என அறிந்தும் திமுகவில் இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், யார் அந்த தியாகி என்ற கேள்விக்குப் பதில் சொல்லத் திராணியில்லாத முதலமைச்சர் ஸ்டாலின் சம்மந்தம் இல்லாமல் பதில் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்
சிட்டி பாபுவில் ஆரம்பித்து, தா. கிருட்டிணன், சாதிக் பாட்சா என பல்வேறு தியாகிகளை வரிசையாகக் கூற முடியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், உங்கள் குடும்பத்தில் செல்வாக்கு யாருக்கு அதிகம் என்ற போட்டியில் எரித்துக் கொல்லப்பட்டு , தியாகிகள் ஆக்கப்பட்ட அப்பாவி தினகரன் ஊழியர்களை நினைவிருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறோம் என அறிந்தும், திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறதே, அந்த ஊழலுக்குப் பொறுப்பான தியாகி யார் என்று தான் கேட்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள அவர், அவருக்குத் தியாகி பட்டம் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தான் அந்த கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.