நெல்லை டவுண் பகுதியில் நள்ளிரவு 20 வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுண் குருநாதன் கோவில் விளக்கு அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட போலீசார், 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முட்புதரில் இருந்து சடலத்தை மீட்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனைக்காகச் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், கொலை செய்யப்பட்ட நபர் டவுண் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் எனத் தெரியவந்தது. மேலும், காதல் விவகாரத்தில் கொலை நடித்திருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.