புதுக்கோட்டையில் 120 நாடுகளின் பெயர்களை 90 நொடிகளில் சொல்லி நான்கு வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.
அறந்தாங்கி அருகே உள்ள குருகுலம் பள்ளியில் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 4 வயது சிறுமி யாழிசை வெண்பா ஆசிரியர்கள் காண்பித்த நாடுகளின் கொடிகளைப் பார்த்து, அந்த நாடுகளின் பெயர்களை 90 நொடிகளில் சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா கலந்து கொண்டு சிறுமிக்குப் பாராட்டு தெரிவித்தார்.