தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கர்ப்பிணி மனைவி மீது ஈவு இரக்கமின்றி கல்லைத் தூக்கிப் போட்டு கொடூர தாக்குதல் நடத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கொண்டாப்பூரை சேர்ந்த 4 மாத கர்ப்பிணியான பர்வீன் உடல்நிலை பாதிப்பால் கட்சிபவுலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சிகிச்சை முடிந்து கணவர் பஷ்ரத்துடன் வீடு திரும்பும் வழியில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த பஷ்ரத், மனைவி பர்வீனை கீழே தள்ளி, அவர் மீது கல்லைப் போட்டு கொடூரமாகத் தாக்கினார். இதில், சுயநினைவை இழந்த பர்வீன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.