உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு சிக்கன் பிரியாணி அனுப்பிய உணவக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
நொய்டாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம், வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தார். பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது அது சிக்கன் பிரியாணி என்பது தெரியவந்தது.
இதனால் ஆர்டரை ரிட்டன் செய்ய முயற்சித்த நிலையில், கடை மூடப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டார்.
சைவ உணவு மட்டுமே சாப்பிடும் தனக்கு வேண்டுமென்றே சிக்கன் பிரியாணி கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். இந்த வீடியோ அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வாடிக்கையாளருக்கு வெஜ் பிரியாணிக்குப் பதில் சிக்கன் பிரியாணி அனுப்பிய உணவக ஊழியரைக் கைது செய்தனர்.