ஆந்திராவில் விரைவு ரயிலின் கப்ளிங் உடைந்து இரண்டு பெட்டிகள் தனியாக ஓடியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள பலாச அருகே பலக்னாமா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக ரயில் பெட்டிகளை இணைக்கப் பயன்படுத்தப்படும் கப்ளிங் உடைந்து இரண்டு பெட்டிகள் ரயில் தண்டவாளத்தில் ஓடின.
நல்வாய்ப்பாக அப்போது ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த காரணத்தால், பெட்டிகளும் மெதுவாகத் தண்டவாளம் மீது ஊர்ந்து சென்றன.
இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. செகந்திராபாத்தில் இருந்து ஹவுரா செல்லும் பலக்னாமா ரயிலின் பெட்டிகள் தனியாக ஓடியதால் பயணிகள் அவதி அடைந்தனர்.