இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், செய்தி ஊடகங்களில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி ஓராண்டை நிறைவு செய்து, இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பல வெற்றிகளைப் பெறத் தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கும்,
அதன் ஊழியர்களுக்கும் தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.