புதுக்கோட்டை மாவட்டம் புலியூரில், தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில், தாயே குழந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் புலியூர் கிராமத்தில் நேற்று முன்தினம் தண்ணீர் பேரலில் 5 மாத குழந்தை சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், குழந்தையின் தாய் லாவண்யா குழந்தையைக் கொன்றது தெரியவந்தது.
அவருக்குத் திருமணமாகி ஓன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் கடந்த 3 மாதமாக லாவண்யா வசித்து வருகிறார்.
குழந்தை பிறந்ததிலிருந்து விரக்தியில் இருந்து வந்த லாவண்யா குழந்தையைக் கொன்றுவிட்டு, நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் தனது கழுத்திலிருந்த சங்கிலியைப் பறித்துக் கொண்டு குழந்தையைத் தண்ணீர் பேரலில் மூழ்கடித்துக் கொன்றதாகக்கூறி நாடகமாடியதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.