நாமக்கல்லில் லாரியை பழுது பார்க்காமல் பல மாதங்களாக இழுத்தடித்த தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாப்பிநாயக்கன்பட்டி அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் செந்தமிழ் செல்வன் என்பவர் 5க்கும் மேற்பட்ட லாரிகளை வாங்கியுள்ளார்.
2023ஆம் ஆண்டு வாங்கிய 3 லாரிகளில் ஒன்று பழுதானதால், அதனை தனியார் நிறுவனத்தில் பழுது பார்க்க நிறுத்தியுள்ளார்.
9 மாதங்களுக்குப் பிறகு பழுது நீக்காமல் லாரியை தனியார் நிறுவனம் திருப்பி அனுப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு செந்தமிழ் செல்வன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனைவியின் தாலியை அடக்கு வைத்து வாங்கிய லாரியை பழுது பார்க்காமல் ஊழியர்கள் மிரட்டல் விடுப்பதாகக் குற்றம்சாட்டினார்.