டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்த வழக்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், இதற்கு எதிராகத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் மனுத்தாக்கல் செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் எனத் தமிழக அரசு அந்த மனுவில் கோரிக்கை விடுத்தது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிடாது எனக்கூறிய தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் விசாரணை நடத்தலாம் எனத் தெரிவித்தார்.
இதன் பின்னர் நீதிபதிகள் வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து தமிழக அரசு மனுவைத் திரும்பப் பெற்றது.