அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கே.என்.ரவிச்சந்திரனின் வீட்டில் 2வது நாளாக சோதனையை தொடர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள ED அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், மீண்டும் ரவிச்சந்திரனை அவரது இல்லத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.