சீனப் பெருஞ்சுவர் அருகே ஆப்ரிக்காட் மலர்கள் பூத்துக் குலுங்குவது காண்போரைக் கண் கவரச்செய்தது.
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் சீனப் பெருஞ்சுவரை காணத் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், அங்கு தற்போது ஆப்ரிக்காட் மலர்கள் அதிகளவில் பூத்துக் குலுங்குவதால் அவற்றைச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
இதேபோல் அங்குக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுவதால் சுற்றுலாப் பயணிகள் அவற்றைக் காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.