வேலூர் மாவட்டம், கொண்டப்பள்ளியில் போலீசாரின் விசாரணைக்குப் பயந்து இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் வி.கோட்டா அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு காரை வழிமறித்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக பேரணாம்பட்டைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் கள்ளிச்சேரியை சேர்ந்த ஜெயப்பிரகாஷை, ஆந்திர போலீசார் தேடி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் போலீசாரின் விசாரணைக்குப் பயந்த ஜெயப்பிரகாஷ் விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்னதாக வழக்கில் கைதான நபர்களே தன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும் ஜெயப்பிரகாஷ் ஆடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.