அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது.
அமெரிக்க கல்வி நிறுவனங்களில் சேர அந்த நாட்டு அரசு சார்பில் F1 விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவை பெற்று அமெரிக்க கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், விருப்ப பயிற்சி எனும் O.P.T. திட்டத்தில் இணைந்து அமெரிக்காவில் பணியாற்ற முடியும்.
அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்ட துறைகளில் பட்டம் பெற்றவர்கள், அமெரிக்க நிறுவனங்களில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றலாம். இந்த சூழலில் O.P.T. திட்டத்தை ரத்து செய்யும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்கு ‘நேர்மையான உயர் திறன் அமெரிக்க சட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவால் O.P.T. திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதால், சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியர் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.