சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பணி நேரத்தில் உதவி நிர்வாக அலுவலர் தூங்கியது குறித்து தமிழ் ஜனத்தில் செய்தி வெளியானதால், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
தாதகாப்பட்டி உழவர் சந்தையில் வெங்கட்ராமன் என்பவர் உதவி நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அலுவலகத்திலேயே உறங்குவது மட்டுமின்றி விவசாய பொருட்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய லஞ்சம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெங்கட்ராமன் பணி நேரத்தில் அலுவலகத்திலேயே உறங்கியது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியால் வேளாண் வணிகவரித்துறை துணை இயக்குநர் பிரேமா தலைமையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மேலும் வெங்கட்ராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.