சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை நகராட்சியில் 68 நிரந்தர தூய்மை பணியாளர்களும், 90 ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் உள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டம், நிரந்தர வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்களுக்காக பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யும் நகராட்சி நிர்வாகம், அந்த பணத்தை வேறு செலவிற்குப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
எனவே இதைக் கண்டித்துக் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.