மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு 10.30 மணிக்கு சென்னை வர உள்ளார்.
இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4.20 மணி வரை பாஜக முக்கிய நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
பின்னர் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை மாலை டெல்லி புறப்பட திட்டமிட்டுள்ளார்.