காஷ்மீரில் உயிரிழந்த மேட்டூர் அடுத்த மேச்சேரி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் கா உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்த முருகன்-சாந்தி தம்பதியின் இரண்டாவது மகன் சக்தி, கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் ராணுவத்தில் இணைந்தார். காஷ்மீரில் பணியாற்றி வந்த சக்தி, திடீரென உயிரிழந்ததாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உடலை ராணுவ அதிகாரிகள் சொந்த ஊருக்கு எடுத்து வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு ராணுவ வீரர் சக்தியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.