கோவை வருகை தந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மத்திய அமைச்சர் எல்.முருகன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாட்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். அவரை மத்திய அமைச்சர் எல்.முருகன், முப்படை தளபதிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைதொடர்ந்து சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்ற அவர், அங்கு நடைபெறும் முக்கிய நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார்.