திருச்சி காந்தி மார்க்கெட்டில் பட்டப்பகலில், முதியவரை வழிமறித்து 3 இளைஞர்கள் பணத்தை பறித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் அனைத்து நேரங்களிலும் பரபரப்பாக காணப்படும் நிலையில், அந்த வழியாக முதியவர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து 3 இளைஞர்கள் வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் முதியவரின் கைகளை 2 இளைஞர்கள் பிடித்து கொண்ட நிலையில், ஒருவர் சட்டப்பையில் இருந்த பணத்தை பறித்து கொண்டு 3 பேரும் தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் தொடர்ந்து திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மார்க்கெட் அருகே காவல் நிலையம் உள்ள நிலையில், போலீசார் ஏன் ரோந்து பணியில் ஈடுபடவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அலட்சியமாக செயல்படும் போலீசார் மீது காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.