மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் வெள்ளிவேலை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம், மருதமலை கோயில் அடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான வேல் கோட்டம் என்ற மடம் உள்ளது. இங்கு இரண்டரை அடி உயரத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளிவேல் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம், மருதமலை கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மடத்தில் இருந்த வெள்ளிவேலை மர்மநபர் திருடி சென்றுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில், பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்பவர் வெள்ளிவேலை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த வெங்கடேஷ் சர்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.