கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில் வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராய்ச்சூர் டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக மண்டல அதிகாரிகள் வழக்கம்போல ஆய்வு மேற்கொண்டு, அடகுவைத்த நகைகளைச் சரிபார்த்தனர்.
அப்போது, 29 வங்கிக் கணக்குகளில் போலி நகைகளை அடகு வைத்து 11 கோடி ரூபாய் கடன் வாங்கியது போல் மோசடி செய்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து மண்டல அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 80 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்த நிலையில், தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.