திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உறையூரில் அமைந்துள்ள ஸ்டேட் பேங்க் காலனியில் பூங்கா அமைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கியது. தற்போது அந்த இடத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் எனக்கூறி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் பகுதிக்குச் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.