நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ஏமாற்றிய திமுக பிரமுகர் உட்பட இருவருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ல் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி குன்னூரைச் சேர்ந்த 4 பேரிடம் இருந்து 14 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு திமுக வார்டு கிளை செயலாளர் ரஹிம், ஜோகி ஆகியோர் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வேலை வாங்கி தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய ரஹிம், ஜோகி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், பணம் வாங்கியவர்களுக்கு மொத்தம் 26 லட்சத்து 36 ஆயிரம் ரூபாயை 3 மாதத்திற்குள் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியது.