பாட்டாளி மக்கள் கட்சிக்கு இனி நானே தலைவராக இருப்பேன் என அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
பாட்டாளி மக்கள் கட்சிக்கு இனி நானே தலைவராக செயல்படுவேன் என்றும் தலைவராக இருந்த அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என ராமதாஸ் தெரிவித்தார்.
2026 தேர்தலில் இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவு என்றும் எனக்கு பதவிகளின் மீது ஆசை இருந்ததில்லை என ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.