சீனா செல்லும் அதிபர் டிரம்ப் - ஜி ஜின்பிங் உடனான மனக்கசப்பு நீங்குமா?
Sep 12, 2026, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீனா செல்லும் அதிபர் டிரம்ப் – ஜி ஜின்பிங் உடனான மனக்கசப்பு நீங்குமா?

Manikandan by Manikandan
Jan 24, 2026, 09:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீனாவுடனான மோதல் போக்கை கைவிட்டு, மீண்டும் நட்பு பாராட்ட ஆரம்பித்திருக்கிறார். எதனால் இந்த திடீர் மனமாற்றம் என்பது குறித்து விவரிக்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்….

உலக அரசியலில் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவரது இரண்டாம் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்டு வரும் வெளிநாட்டு கொள்கை முடிவுகள், அமெரிக்காவின் நீண்டகால கூட்டாளிகளையே அச்சமடையச் செய்துள்ளன. ஒருபுறம் கிரீன்லாந்து முதல் காசா வரையிலும், மற்றொருபுறம் ஐரோப்பாவிலிருந்து நேட்டோ நாடுகள் வரையிலும், அதிபர் டிரம்பின் அணுகுமுறைகள் தூதரக சமநிலையில் இருந்து விலகி, அழுத்தம் மற்றும் மிரட்டல்களை மையமாகக் கொண்டதாக மாறிவிட்டது என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

கிரீன்லாந்து விவகாரமே இந்த பரபரப்பின் மையமாக உள்ளது. அந்த ஆர்டிக் தீவைக் அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சர்வதேச பாதுகாப்புக்கு அவசியம் எனவும், இது பேச்சுவார்த்தைக்குரிய விஷயம் அல்ல என்றும் டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால், அரசியல் நிபுணர்களோ, இதனை பொருளாதார வரி மிரட்டல்களாகவும், பொதுவெளி அழுத்தங்கள் மற்றும் சமூக ஊடக நாடகங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் கட்டாய அரசியல் நடவடிக்கையாகவும் பார்க்கின்றனர்.

இதே வேளையில், காசாவுக்காக முன்வைக்கப்பட்டுள்ள புதிய “BOARD OF PEACE” திட்டம், ஐரோப்பாவை நோக்கிய டிரம்பின் கடுமையான வர்த்தக நிலைப்பாடுகள் ஆகியவை நேட்டோ கூட்டணியின் ஒற்றுமையையே சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது. அண்மையில் வெனிசுலாவில் நடந்த அமெரிக்க ஆதரவு கொண்ட தலையீட்டுக்குப் பின், டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து மீது டிரம்ப் நேரடியாக உரிமை கோரியதும் சர்ச்சையை தீவிரப்படுத்தியுள்ளது.

அதேபோல, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் டிரம்புக்கு ஏற்பட்ட முரண்பாடுகளும் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கிரீன்லாந்து குறித்த அமெரிக்காவின் நோக்கங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என மேக்ரான் அனுப்பிய தனிப்பட்ட செய்தியை, டிரம்ப் பொதுவெளியில் பகிர்ந்ததைத் தொடர்ந்து இருநாட்டு உறவில் சிக்கல் அதிகமானது. இதனை மனதில் வைத்து காசா அமைதிக் குழுவில் சேர மறுத்த பிரான்சுக்கு, 200 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்ததும் பிற அண்டை நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறிப்பாக, AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள், அமெரிக்க வரைபடங்களில் கனடா மற்றும் கிரீன்லாந்தை இணைத்துக்காட்டும் காட்சிகள் போன்றவை, டிரம்பின் அரசியலில் குறியீடுகள் மற்றும் மிரட்டல்கள் முக்கிய ஆயுதங்களாக மாறியுள்ளதை காட்டுகின்றன. இதன் காரணமாக, ஐரோப்பிய ஒன்றியமும் 93 பில்லியன் யூரோ மதிப்பிலான எதிர்தடுப்பு நடவடிக்கைகளை பரிசீலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரிட்டனில் அமெரிக்காவுடனான ‘சிறப்பு உறவு’ முறிவின் விளிம்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் எச்சரிக்கின்றன. இத்தகைய சூழலில், அதிபர் டிரம்பின் வெளிநாட்டு கொள்கை அமெரிக்காவின் உலகப் புகழையும், அதன் தூதரக முகத்தையும் மாற்றி, பல நாடுகளை பொருளாதார மற்றும் அரசியல் மோதல்களுக்கு தயாராக நிறுத்தியுள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: chinaamericauspresident trumpGreenland
Share
Tweet
SendShare
Previous Post

காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு – பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்

Next Post

இரு நாள் பயணமாக வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித் ஷா – என்டிஏ கூட்டணி தலைவர்களை சந்திக்கிறார்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் உச்சி மாநாடு : சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

குடியரசு கட்சி வெற்றி பெற்றால் 5000 டாலர் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies