வியட்நாம் பெண்ணை காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட நெல்லை இளைஞருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த மகேஷ் சுப்பிரமணியன், வியட்நாமில் வேலை பார்த்து வருகிறார். இவரும் அந்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்.
இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
நெல்லையப்பர் கோயிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், உறவினர்கள் முன்னிலையில் வியட்நாம் பெண்ணை நெல்லை இளைஞர் கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.