தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மேட்டூர் அணையில் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத்ராம் சர்மா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தொடர்ந்து 100 அடியைத் தாண்டி தண்ணீர் உள்ளதால் பாசனத்திற்குத் திட்டமிட்டபடி ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்துக் கடந்த 7ஆம் தேதி தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா நேரில் ஆய்வு மேற்கொண்டார். அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், அணையில் நடைபெற்று வரும் புனரமைப்ப பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டூர் அணையின் பராமரிப்பு சிறப்பாக உள்ளதாகவும், வழக்கமான ஆய்வுப் பணிக்காக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றும் தெரிவித்தார்.