திருச்செந்தூர் அருகேயுள்ள சோமநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழாவை ஒட்டி தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆத்தூரில் அமைந்துள்ள சோமசுந்தரி அம்மாள் சமேத சோமநாத சுவாமி கோயிலில், இந்த ஆண்டுக்கான பங்குனி பெருந்திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினந்தோறும் சுவாமி மற்றும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த சூழலில், விழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற கோஷங்கள் முழங்கப் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.