புதுச்சேரியில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற தேர்ப் பவனியில் 500-க்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள ஜெயின் கோயிலில் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோயில் முன்பாக திரண்ட ஜெயின் சமூகத்தினர் பல்வேறு வாத்தியங்களை இசைத்தும், ஆடிப்பாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற தேர்ப் பவனியில் 500-க்கும் மேற்பட்ட ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.