சேலம் மாவட்டம் சங்ககிரியில் லாரி ஓட்டுநரை, போலீசார் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிர் திசையில் தவறான பாதையில், தனியார் நூற்பாலை வேன் வந்ததால் இரண்டு வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டது.
அப்போது அங்கு இரவு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சரியான பாதையில் வந்த லாரியை பின்பக்கமாக நகர்த்தும் படி ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது லாரி ஓட்டுநரை போலீசார் தாக்கியுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.