இந்தியாவில் HMD நிறுவனத்தில் லேட்டஸ்ட் ஃபீச்சர் போன்களாக HMD 130 Music மற்றும் HMD 150 Music ஆகியவை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய ஃபீச்சர் மொபைல்கள் பல கலர் ஆப்ஷன்களில் வருவதுடன், 2,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளன.
இவற்றை ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 மணி நேரம் வரை மியூசிக் பிளேபேக் டைமிங் கிடைக்கும் என்றும், அதிகபட்சமாக 36 நாட்கள் ஸ்டாண்ட்பை டைமிங் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர இந்த செல்போன்கள் UPI பேமென்ட் திறன்களையும் கொண்டுள்ளன.