அட்லி இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு குறித்து வெளியிடப்பட்ட போஸ்டர் காப்பி அடித்து உருவாக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்துள்ளது.
இயக்குநர் அட்லி அடுத்து இயக்கும் படத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ளார். இந்த படம் அல்லு அர்ஜுனின் 22வது படம் என்பதையும், அட்லியின் 6-வது படம் என்பதையும் குறிக்கும் வகையில் #AA22xA6 என்ற ஹஸ்டேக்குடன் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த போஸ்டர் பிரபல ஹாலிவுட் படமான டூன் படத்தின் போஸ்டர் போலவே உள்ளது என்று இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து அட்லி படங்கள் காப்பி பேஸ்ட் சர்ச்சையில் சிக்கிவருவது பேசுபொருளாகியுள்ளது.