ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் ஏ.ஐ. தொழில் நுட்பத்துடன் கூடிய ரோபோட்டிக் ஆசிரியர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
50 மொழிகளில் பேசக்கூடிய திறன் படைத்த இந்த ரோபோட்டிக் ஆசிரியருக்கு மார்க்கெட் என பெயரிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் இந்த ரோபோட்டிக் ஆசிரியர் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த ரோபோட்டிக் ஆசிரியருடன் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினர்.