விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராத திமுக அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு ஆகிய காரணங்களால் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போதுமானதாக இல்லை எனக்கூறி விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இபிஎஸ், விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப் பேரவையில் இதுகுறித்துப் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறியுள்ள இபிஎஸ், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.