திமுக ஆட்சியில் நடைபெறும் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தமிழ்நாட்டில் நடந்த பல ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலின் ஒரு அம்சத்தை விளக்குவதாக தெரிவித்துள்ளார்.
மகாவீர் ஜெயந்தி அன்று, அரசு நடத்தும் மதுபானக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன என்றும், ஆனால் புதுக்கோட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டவிரோத மற்றும் வணிக நேர விற்பனைகள் அனைத்தும் கணக்கில் காட்டப்படாத விற்பனை என்றும், அவை நேரடியாக திமுக அமைச்சரின் பாக்கெட்டில் சேருவதாகவும் கூறியுள்ளார்.
திமுகவின் பேராசைக்கு எந்த இடையூறும் இல்லை என்றும், தமிழக அரசின் system கொள்ளையை ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ளார்
இந்த பட்டப்பகல் கொள்ளைகள் அனைத்தும் மிக விரைவில் முடிவுக்கு வரும் என அண்ணாமலை கூறியுள்ளார்.