திமுக ஆட்சி குறைகள் மட்டுமே நிறைந்த அவல ஆட்சியாக உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், திமுக அரசின் ஆட்சி சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், எங்கும் எதிலும் ஊழல் எனக் குறைகள் மட்டுமே நிறைந்த ஆட்சியாக உள்ளதென்று விமர்சித்துள்ளார்.
இதனை நன்கு உணர்ந்தே முதலமைச்சர் ஸ்டாலின் திசைதிருப்பும் முயற்சியாக பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க ஒரு முதலமைச்சராக ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணையில் விவகாரத்தில் கேரள கம்யூனிஸ்டு அரசைக் கண்டித்தும் முடிந்தால் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.