மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்தில் அவரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலைச் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு சென்று அவரது தந்தையின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியரான ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு சென்ற அமித்ஷா, அவருடன் 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும், திமுக-வின் வியூகங்களை கையாள்வது தொடர்பாகவும் இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.