நாமக்கல் சேந்தமங்கலம் அருகே அமைந்துள்ள பள்ளிவாசலில் நிர்வாகக் குழுவினரின் பதவிக்காலத்தை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சேந்தமங்கலம் சாலையில் உள்ள பள்ளிவாசலில் நிர்வாகக் குழுவினரின் பதவிக்காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது.
வக்பு வாரியத்தால் தேர்தல் நடத்த முடியாத சூழல் உள்ளதால் தற்போது பதவியில் உள்ள நிர்வாகக் குழுவினரையே நீட்டிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நிர்வாகக் குழுவை நீட்டிப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.